Published : 01 Dec 2021 06:40 AM
Last Updated : 01 Dec 2021 06:40 AM

திருப்பத்தூர் அருகே - வெள்ளத்தில் சிக்கிய முதியவரின் உடல் அழுகிய நிலையில் மீட்பு :

நாகேந்திரராவ். (கோப்புப்படம்)

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட முதியவர் உடல் அழுகிய நிலையில் நேற்று மீட்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த வாரம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

இந்நிலையில், திருப்பத்துார் அடுத்த இருணாப்பட்டு ஊராட் சிக்கு உட்பட்ட வனத்துறை சாலை பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி நாகேந்திர ராவ்(85). இவர், அதேபகுதியில் உள்ள பாம்பாற்றை கடந்த 20-ம் தேதி கடந்து செல்லும் போது அவர் ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டார். இதைக்கண்ட பொதுமக்கள் திருப்பத்தூர் தீயணைப்புத்துறை மற்றும் குரிசிலாப்பட்டு காவல் நிலை யத்துக்கு தகவல் அளித்தனர்.

முதியவரை மீட்பதில் சிரமம்

அதன் பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் நாகேந் திரராவை தேடினர். ஆற்றில் அதிக நீர்வரத்து இருந்ததால் முதியவரை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

இருப்பினும், தொடர்ந்து தேடும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இருணாப்பட்டு அருகே பாம்பாறு கரையோரத்தில் அழுகிய நிலையில் ஆண் உடல் இருப்பதாக குரிசிலாப்பட்டு காவல் நிலையத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், அங்கு வந்த காவல் துறையினர் ஆற்றில் அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நாகேந்திர ராவ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, குரிசிலாப்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x