Published : 01 Dec 2021 06:40 AM
Last Updated : 01 Dec 2021 06:40 AM
தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகளில் உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் வைரஸ் என பெயரிடப்பட்டுள்ள கரோனா அதிகமாக பரவும் தன்மையுடையது.
இதிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதிக அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கரோனா பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினசரி நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு கரோனா பரிசோ தனைகள் மேற்கொள்ள வேண் டும். ஓமிக்ரான் வைரஸ் பரிசோதனை செய்யும் வசதி பொது சுகாதார ஆய்வகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி ஓமிக்ரான் வைரஸ் தாக்கினால் மருத்துவமனை சிகிச்சை மற்றும் உயிரிழப்பிலிருந்து கரோனா தடுப்பூசி பாதுகாப்பளிக்கிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட அனை வருக்கும் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய் தல், அறைகளை காற்றோட்டமாக வைத்திருத்தல் போன்ற செயல்கள் இந்த உருமாறிய கரோனா வைரஸ் பரவுவலை தடுக்கும்.
தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கரோனா தடுப்பு முறை களை பின்பற்றுதல் ஆகிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட பொது மக்கள் அனைவரும் இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளை உரிய நாட்களில் செலுத்திக் கொள்ளவேண்டும் என அறிவிக் கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூருக்கு சிகிச்சைக்காக வெளி மாநிலத்தினர் அதிகளவில் வருவதால், வெளி மாநிலத்தவர்கள் வந்த உடனேயே அவர்களுக்கு கட்டாயமாக கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வேலூரில் உள்ள விடுதிகளில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து அவர்கள் 14 நாட்களுக்கு தனிமை படுத்தபடுத்தவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் வந்துள்ள வெளிமாநிலத்தவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், நோய் தடுப்புப் பணிகளை தீவிரமாக்க வேண்டும், தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT