Published : 29 Nov 2021 03:07 AM
Last Updated : 29 Nov 2021 03:07 AM
கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் விடிய விடிய மிதமான மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு தொடங்கிய மழை விடிய விடிய மிதமாக பெய்ததால், மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை இருந்தது. நேற்று காலையிலும் விட்டு விட்டு மழை பெய்ததால், ஏரி குளங்களில் நீர் நிரம்பி அவை வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதியில் தேங் கியது.
இதனால் மழை வெள்ளம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எஸ்.மலையனூர் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றது. அந்த பகுதியில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏமம் நத்தகாளி ஆகிய கிராமங் களில் பயிரிடப்பட்டிருந்த விளைநிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.சங்கராபுரத்தை அடுத்த பாலப்பட்டு கிராமத்தில் 5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சின்னவெங்காயம் மழைநீர் தேங்கியதால் அழுகி வீணாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி கோட்டத்தில் 90 மி.மீட்டர் மழையும், உளுந்தூர்பேட்டையில் 65 மி.மீட்டரும், திருக்கோவிலூரில் 52 மி.மீட்டரும் மழை பதிவாகியது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சராசரியாக 11.23 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 25.58 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வானூர் வட்டத்தில் 46 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழையால் விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயில் குளத்திற்கு செல்லும் வடிகால் தூர்ந்து போனதால், நகர் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த ஆட்சியர் மோகன், வடிகால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதை அறிந்து, கோயில் குளத்திற்கு மழைநீர் வரத்திற்கான பணி களை மேற்கொள்ளவும், ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருப்பின் அகற்றிட தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT