Published : 29 Nov 2021 03:08 AM
Last Updated : 29 Nov 2021 03:08 AM
அரியலூர் மாவட்டத்தில் 11,713 ஹெக்டேரில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷராம் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை காரணமாக, வாரணவாசியில் ஓடும் மருதை யாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், மழைநீரால் பாதிக் கப்பட்ட வயல்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷராம், ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அப்போது, மாவட்ட கண் காணிப்பு அலுவலர் தெரிவித்தது: வடகிழக்கு பருவமழையின் கார ணமாக அரியலூர் மாவட்டத்தில் 1,149 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர், 5,880 ஹெக்டேர் பருத்தி, 2,599 ஹெக்டேர் உளுந்து, 11 ஹெக்டேர் கரும்பு, 2,071 ஹெக்டேர் சோளம் உட்பட 11,713 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், கனமழையின் காரணமாக 5,800.65 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெல், சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த பயிர்களை கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மருதையாற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் மக்கள் ஆற்றில் இறங்கவோ, கால்நடை களை குளிப்பாட்டவோ வேண்டாம் என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னு லாப்தீன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், இணை இயக்குநர் (வேளாண்மை) பழனிசாமி, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) வேல்முருகன் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT