ஈரோடு ரங்கம்பாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு ரங்கம்பாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் 5 ஆயிரம் பேர் பங்கேற்பு :

Published on

ஈரோடு ரங்கம்பாளையத்தில் மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி தொடங்கி வைத்தார். ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்றாற் போல் நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலில் தேர்வானவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்பட்டன.

மாவட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்ட அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in