Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை கடந்த 13-ம் தேதி எட்டியது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 27 ஆயிரம் கனஅடியானது. மாலையில் 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து மின்நிலையங்கள் வழியாக விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியும், 16 கண் மதகு வழியாக 8 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120.10 அடியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT