வெள்ளி, ஜனவரி 10 2025
Last Updated : 23 Nov, 2021 03:06 AM
Published : 23 Nov 2021 03:06 AM Last Updated : 23 Nov 2021 03:06 AM
கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தெற்கு மத்திய ரயில்வேயின் விஜயவாடா கோட்டத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் காரணமாக கோவை, திருப்பூர் வழியாக இயக்கப்படும் பாட்னா-எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22670), பாட்னாவில் இருந்து இன்று (நவ.23) மாலை 4.30 மணிக்கு புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, கோவை, திருப்பூர் வழியாக இயக்கப்படும் டெல்லி-திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12626), டெல்லியில் இருந்து இன்று இரவு 8.10 மணிக்கு புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT