Published : 22 Nov 2021 03:07 AM
Last Updated : 22 Nov 2021 03:07 AM
ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்க 2013-ம் ஆண்டு பிப்.19-ல் முதல் அம்மா உணவகத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 700 அம்மா உணவகங்கள் தொடங்கி இதன் மூலம் நாள்தோறும் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பசியாறுகின்றனர். மதுரையில் 12 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. திருமங்கலம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள உணவகத்துக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் விநியோகம் செய்பவர்களுக்கு ஆறு மாதமாக பணம் தரவில்லை. இதனால் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அம்மா உணவகத்தில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா புகைப்படத்துக்கு அருகில் அய்யா (கருணாநிதி) புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ஜெயலலிதாவின் சாதனையை மறைக்க திமுக அரசு முயற்சி செய்கிறது. அய்யா படத்தை வைப்பதில் காட்டுகிற முனைப்பை ஏழை மக்களுக்கு உணவு வழங்க முக்கியத்துவம் அளித்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவர். உணவகத்தில் ஜெயலலிதா படத்தை மீண்டும் வைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT