Published : 22 Nov 2021 03:07 AM
Last Updated : 22 Nov 2021 03:07 AM

மறைந்த நன்மாறன் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் சார்பில் ரூ.6 லட்சம் நிதியுதவி :

மதுரை: மதுரை விராட்டிபத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மதுரை மாநகர் 23-வது மாநாடு நிறைவு விழா நடைபெற்றது. இம்மாநாட்டில், மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ என்.நன்மாறன் குடும்ப பாதுகாப்பு நிதியாக மாநகர் மாவட்டக் குழு சார்பில் ரூ.5 லட்சம், புறநகர் சார்பில் ரூ.1 லட்சம் உட்பட மொத்தம் ரூ.6 லட்சம் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ். வெங்கட்ராமன், ஏ.லாசர், கே.கனகராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் க.சுவாமிநாதன், சி.ராமகிருஷ்ணன், சு. வெங்கடேசன் எம்பி, புறநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் கட்சியின் மாவட்டச் செயலாளராக மா.கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், 13 மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், 28 மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 41 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x