Published : 21 Nov 2021 03:09 AM
Last Updated : 21 Nov 2021 03:09 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சமரசத் துக்கு இடமில்லாமல் அகற்றப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கன மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட கதிரம்பட்டி சுகாதார நிலையம், புதுக்கோட்டை ஊராட்சி நெடுஞ்சாலை பாலம், பாச்சல் என்.ஜி.ஓ நகர், லட்சுமி நகர் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், வெலதிகாமணிபெண்டா நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண் சரிவு, பெரியாங்குப்பத்தில் பயிர்ச்சேதம், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, ஆம்பூரில் சாமி யார் மடம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி எஸ்.ஜவஹர், மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, திரு வண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவராஜி, நல்லதம்பி, வில்வ நாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆய்வு தொடர்பாக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வாணியம்பாடி-குப்பத்தை இணைக்கும் மலைச்சாலை 45 கி.மீ தொலைவுக்கு உள்ளது. இதில், 15-வது கி.மீட்டரில் உள்ள மலைப்பாதையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதையடுத்து, நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் இரவு, பகல் பார்க்காமல் சாலையை சீர் செய்கின்றனர். அவர்களுக்கு துணையாக வனத்துறையினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 50 மீட்டர் தொலைவுக்கு வளைவு பகுதியில் பாதிப்பு ஏற்பட் டுள்ளது. தற்போதைக்கு இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல முடியும். மண் அரிப்பு ஏற்படாமல் கான்கிரிட் தடுப்பு சுவர் அமைத்தால்தான் கனரக வாகனம் செல்ல முடியும். அதற்கு கால தாமதம் ஏற்படும்.
பொதுவாக நீர் வழிப்பாதை களை பொதுமக்கள் சிலர் ஆக்கிர மிப்பு செய்கிறார்கள். இதனால் நீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி சரி செய்தால் ஊருக்குள் தண்ணீர் வரும் பிரச்சினை நின்றுவிடும். ஆக்கிரமிப்பு அகற்று வதில் எந்தவித சமரசம் செய்து கொள்ள முடியாது’’ என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT