Published : 21 Nov 2021 03:09 AM
Last Updated : 21 Nov 2021 03:09 AM

கலசப்பாக்கம் அருகே உள்ள - பருவதமலை உச்சியில் 5 பேருக்கு திடீர் மயக்கம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருவண்ணாமலை

கலசப்பாக்கம் அருகே உள்ள பருவதமலையில் மகா தீபம் ஏற்ற சென்ற 5 பேர், ஜெனரேட்டர் அறையில் உறங்கியபோது மயக்க மடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகா தேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயர பருவத மலை உச்சியில் மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது.

இக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளான நேற்று முன்தினம் மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தை ஏற்ற சென்ற 35 பேர் வீடு திரும்பி உள்ளனர். அவர்களில் 15 பேர், கோயிலில் தங்கி உள்ளனர். அதில் 5 பேர், ஜெனரேட்டர் அறையில் படுத்து உறங்கி உள்ளனர். அப்போது ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய புகையால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்க மடைந்துள்ளனர். அவர்கள், பொழுதுவிடிந்தும் மறுநாள் காலை கண் விழிக்காமல் உள்ளது குறித்து, உடன் சென்றவர்கள் மூலமாக கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மலையடி வாரத்தில் உள்ள கிராம மக்கள் மற்றும் தீயணைப்புத் துறை யினர் பருவதமலை உச்சிக்கு சென்று, மயக்கமடைந்து கிடந்த தென்மகாதேவமங்கலம் மற்றும் அருணகிரி மங்கலம் பகுதியைச் சேர்ந்த கணேசன்(45), பாலாஜி(21), ராஜதுரை(36), தேவராஜ்(35), பிரியதர்ஷன்(32) ஆகிய 5 பேரை, டோலி மூலமாக மீட்டு மலையடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் உயர் சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடலாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x