Published : 20 Nov 2021 03:08 AM
Last Updated : 20 Nov 2021 03:08 AM
மதுரையில் ஆயுள் தண்டனை கைதிகளின் முன்விடுதலையை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைப்பது தொடர்பாக நவ.23-க்குள் உள்துறை முதன்மை செயலர் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உசிலம்பட்டியில் 2005-ல் வழக்கறிஞர் குமாரகுரு கொலை செய்யப்பட்ட வழக்கில் உசிலம் பட்டியைச் சேர்ந்த உமாசங்கர், சாய்பிரசாத், சுரேஷ்பாண்டியன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் கைதி களை முன்கூட்டியே விடு தலை செய்வது தொடர்பாக 2018-ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததன் அடிப்படையில் உமாசங்கர், சாய்பிரசாத் ஆகி யோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் முன்விடுதலை யை ரத்து செய்து 2 பேரை மீண்டும் சிறையில் அடைக் கக்கோரி மதுரை பிபி சாவடியை சேர்ந்த இளவரசி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், முன்விடுதலைக்கு பிறகு உமாசங்கர், சாய்பிரசாத் உட்பட 3 பேர் என் கணவர் நாகு என்ற நாகேந்திரனை கொலை செய்தது உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது சிறை உறுதிமொழிக்கு எதிரானது. இதனால் இருவரின் முன்விடுதலையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதி பதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு பிறப்பித்த உத்தரவு, உமாசங்கர், சாய்பிரசாத் ஆகியோரது முன் விடுதலையை ரத்து செய்யக் கோரி சிறைத்துறை டிஜிபி பரிந்துரை அனுப்பியுள்ளார். அதன் மீது உள்துறை முதன்மை செயலர் 6 மாதங்களுக்கு மேல் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். இது தொடர்பாக உள்துறை முதன்மை செயலர் நவ.23-க் குள் முடிவெடுக்க வேண்டும். தவறினால் உள்துறை முதன்மை செயலர் நீதிமன்றத்தில் ஆஜராகி, காரணத்தை விளக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT