Published : 18 Nov 2021 03:09 AM
Last Updated : 18 Nov 2021 03:09 AM

நீர் நிலைகளை ஆக்கிரமித்தால் சட்ட நடவடிக்கை : கூட்டுறவு வார விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை

காட்பாடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் வங்கி கடன் உதவிகளை வழங்கிய அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி. அருகில், மாவட்ட ஆட்சியர்கள் பாஸ்கர பாண்டியன், குமாரவேல் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத் துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 68-வது கூட்டுறவு வார விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்கள் குமாரவேல் பாண்டியன் (வேலூர்), பாஸ்கர பாண்டியன் (ராணிப் பேட்டை) தலைமை வகித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்) கதிர் ஆனந்த் (வேலூர்), சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்தி கேயன் (வேலூர்), உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழக கைத்தறித்துறை மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 1,151 பயனாளிகளுக்கு ரூ.10.01 கோடி மதிப்பிலான கடனு தவிகளை வழங்கினர்.

விழாவில் அமைச்சர் துரை முருகன் பேசும்போது, "ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 306 நிறுவனங்கள் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படுகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்கடன் பெற்ற 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் ரூ.617.03 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, நகைக்கடன் ரூ.760.04 கோடி தள்ளுபடி செய்யப்பட உள்ளது. கூட்டுறவு துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் நல்ல திட்டங்கள். அந்த திட்டங்களை செயல் படுத்துவதில் பல குறைகள் உள்ளன. அவை களைக்கப்பட வேண்டும்.

கூட்டுறவு துறையில் பணியாற்று பவர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்துக்கொள்ள வேண்டும். பதவிக்கு வந்தவுடன் லாபத்தை பார்க்கக்கூடாது. கூட்டுறவு துறையில் நடைபெறும் முறைகேடுகளை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண் டும். கூட்டுறவு துறையில் முறை கேட்டில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் போலி நகைகள் வைத்தும், போலி ஆவணங்கள் தயாரித்து கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். அதற் கான பணிகள் நடந்து வருகிறது.

கூட்டுறவு துறையால் பல நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. கூட்டுறவு துறையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடன்களை நேர்மை யாக திருப்பி செலுத்தி வருகின்றனர். இதேபோல, அனைவரும் நடந்துக்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக மழை பெய்துள்ளது.

இந்த மழையால் பெரும் பாலான ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால், தமிழகத்தில் சேதாரம் அதி கரித்து காணப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதமாகியுள்ளன. அதேபோல, வாழை, பப்பாளி, கொய்யா உள்ளிட்ட பயிர்களும் சேதமாகியுள்ளன.

நீர்நிலைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண் டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும். வேலூர் மாவட்டம், அகரம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும்.

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நட வடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x