Published : 17 Nov 2021 03:07 AM
Last Updated : 17 Nov 2021 03:07 AM
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக ஒருங் கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே. பழனிசாமி ஆகியோர் நேற்று பார்வையிட்டு, பாதிக்கப் பட்டோருக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
புவனகிரி பகுதியில் சித்தேரி உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கி ணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான கே.பழனிசாமி ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து புவனகிரி மற்றும் சிதம்பரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்க ளுக்கு அரிசி, பாய், வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
தொடர்ந்து பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பூவாலை கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கிய விளைநிலங்களை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.
இந்நிகழ்வில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் அருள்மொழிதேவன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம்,எம்.சி. சம்பத், அதிமுக அமைப்புச் செயலாளர் நாக முருகுமாறன், கடலூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமாறன், முன்னாள் எம்எல்ஏ அருள், மாவட்ட நிர்வாகி உமா மகேஸ்வரன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் ராசாங்கம், அசோகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT