மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு :

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு :

Published on

தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே உள்ள வீராணத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் அழகேசன்(25). இவர், நேற்று வயலில் நாற்று நடும் பணியில் ஈடுபட்டார். நாற்று கட்டுகளை சுமந்துகொண்டு வரப்பில் நடந்து சென்றுள்ளார். அப்போது, கால் சறுக்கியதால் அருகில் உள்ள மின் கம்பத்தில் கையை வைத்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அழகேசனுக்கு திருமணமாகி 6 மாதமே ஆகிறது. அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி உறவினர்கள் வீராணத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in