சமயபுரம் கோயில் உண்டியலில்  2.9 கிலோ தங்கம் காணிக்கை :

சமயபுரம் கோயில் உண்டியலில் 2.9 கிலோ தங்கம் காணிக்கை :

Published on

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் 2.9 கிலோ தங்கம் பக்தர்களால் காணிக்கை யாக செலுத்தப்பட்டிருந்தது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் அளிக்கப்பட்ட காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் டி.விஜயராணி, ரமேஷ், ஆய்வர் பிருந்தாநாயகி உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ரூ.83 லட்சத்து 3 ஆயிரத்து 237 ரொக்கம், 2.930 கிலோ தங்கம், 2.360 கிலோ வெள்ளி, 74 அயல்நாட்டு கரன்சிகள் இருந்தன.

இதற்குமுன், கடைசியாக கடந்த அக்.29-ம் தேதி இங்கு உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டிருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in