Published : 15 Nov 2021 07:12 AM
Last Updated : 15 Nov 2021 07:12 AM

ராமநாதபுரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி :

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள அரசுடைமை வங்கியின் ஏடிஎம் மையத்தில் கடந்த 12-ம் தேதி நள்ளிரவில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் இரும்புக் கம்பியால் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றார். ஆனால் முடியவில்லை. இக்காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சாலைத்தெரு பாரத ஸ்டேட் வங்கி கிளை உதவிப் பொதுமேலாளர் ராமகிருஷ்ணன் கேணிக்கரை போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x