Published : 15 Nov 2021 07:12 AM
Last Updated : 15 Nov 2021 07:12 AM
எல்ஐசியின் பங்குகளை தனி யாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநில சிறப்பு மாநாடு, மதுரை எல்லீஸ் நகரில் நடைபெற்றது. தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் கே.சுவாமிநாதன் தலைமை வகித்தார். சங்கத்தின் கோட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் என்.பி.ரமேஷ் கண்ணன் வரவேற்றார்.
எம்பிக்கள் டி.கே.எஸ்.இளங் கோவன், தொல்.திருமாவளவன், சு.வெங்கடேசன், எம்எல்ஏ அப்துல் சமது, மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பேசினர்.
இம்மாநாட்டில் எல்ஐசியின் சாதனையை விளக்கும் ‘எல்ஐசி ஒரு ஜீவநதி’ என்ற நூலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆ.செல்வம் வெளியிட, அதை சிஐடியூ மாவட்ட செயலாளர் ஆர்.தெய்வராஜ் பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில், எல்ஐசி நிறு வனத்தின் பங்குகளை விற் பது தனியார்மயத்தின் முதல் படியாகவே அமையும். எனவே, மக்களுக்கும் பாலிசிதாரர் களுக்கும் விரோதமான இம் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
ஊழியர் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் வீ.சுரேஷ் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT