Published : 15 Nov 2021 07:12 AM
Last Updated : 15 Nov 2021 07:12 AM

வாக்காளர் சுருக்க முறை திருத்தப் பணிகள் ஆய்வு :

அரியலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வாக்காளர் சுருக்க முறை திருத்தப் பணிகளை சிறப்பு பார்வையாளர் ப.மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

அரியலூர் மற்றும் ஜெயங் கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 1.1.2022-ம் நாளை தகுதி நாளாகக் கொண்டு கடந்த 2 நாட்களாக வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்கள் நடைபெற்றன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற முகாமை, வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ப.மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

இதில், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் உள்ளிட்ட முகாம்களில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளை பார்வையிட்ட அவர், வாக்காளர் பட்டியல் குறித்து அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் வாக்காளர் உதவி மைய கட்டணமில்லா தொலை பேசி எண் 1950-ஐ தொடர்பு கொள்ளலாம்.

மேலும், 044-25674302 என்ற தொலைபேசி எண்ணிலும், 9445252243 என்ற செல்போன் எண் ணிலும், er22maptk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம் என்றார்.

தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். இந்த இரு நிகழ்வுகளின்போது, ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி, மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய் னுலாப்தீன், கோட்டாட்சியர்கள் அரியலூர் ஏழுமலை, உடையார்பாளையம் அமர்நாத், தேர்தல் வட்டாட்சியர்கள் தர் (தேர்தல்), அரியலூர் ராஜமூர்த்தி, ஜெயங்கொண்டம் ஆனந்தன், ஆண்டிமடம் முத்துகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

கரூர் மாவட்டத்தில்...

கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 619 வாக்குச் சாவடி அமைவிடங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகள் 2-வது நாளாக நேற்று நடைபெற்றன. 2022-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி 18 வயது பூர்த்தியடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்கவும் மற்றும் வாக்காளர் களாக பதிவு செய்யத் தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்யவும் ஏதுவாக இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x