Published : 15 Nov 2021 07:13 AM
Last Updated : 15 Nov 2021 07:13 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கன மழை பெய்ததால் பணகுடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான காவல் கிணறு, பெருங்குடி, ரோஸ்மியபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் பார்வையிட்டு, உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காவல் கிணறு அருகே உள்ள பெருங்குடி கிராமத்தில் மழையில் வீடு இடிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். தற்காலிகமாக அவர்களுக்கு தங்கும் வசதி மற்றும் அரசு திட்ட அடிப்படையில் வீடு கட்ட கடன் வசதி போன்றவற்றை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, பணகுடியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை தொடங்கிவைத்தார். வள்ளியூர் வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் முன்னிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT