Published : 14 Nov 2021 03:07 AM
Last Updated : 14 Nov 2021 03:07 AM
மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்தமுறையில் செவிலியர் களாகப் பணிபுரிய விண்ணப்பிக் கலாம் என மாநகராட்சி ஆணை யாளர் கா.ப.கார்த்திகேயன் தெரி வித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணிக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துணை செவிலியர்/பல் நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் (பெண்கள்) பாடப்பிரிவு படித்தவர் கள், 15.11.2012-க்குப் பிறகு துணை செவிலியர் / பல்நோக்கு சுகா தாரப் பணியாளர்கள் (பெண்) தகுதி பெற்றவர்கள் மற்றும் பிளஸ்-2 உடன் 2 ஆண்டுகள் துணை செவிலியர்/ பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் (பெண்) படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடத்துக்கு தகுதியுடை யவர்கள்.
தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவக் கவுன்சில் வழங்கிய பதிவுச் சான்றிதழைப் பெற்றிருப்பது அவசியம். இவர் கள் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள். விண்ணப்பங்களை மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 19-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பில் பெறப்பட்ட மதிப் பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை மாநகர் நலஅலுவலர் மதுரை மாநகராட்சி, மைய நகர்நல பிரிவு (2-வது மாடி), அறிஞர் அண்ணா மாளிகை, தல்லாகுளம், மதுரை-625 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT