Published : 13 Nov 2021 03:09 AM
Last Updated : 13 Nov 2021 03:09 AM
மதுரை எம்.பி. அலுவலகம், மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் ஆகியவை சார்பில் இணைய வழியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்பை இணைய வழியாக சு.வெங்கடேசன் எம்.பி. தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளி (காது கேளாதோர்) மாணவர்கள் 47 பேர் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் என்.மகாலெட்சுமி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் ஸ்டாலின், நாகராஜ், வீரமணி, பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT