Published : 12 Nov 2021 03:16 AM
Last Updated : 12 Nov 2021 03:16 AM

மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் - ​வேல்முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் ​​ :

மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வேல்முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட வேலம்மாள் மருத்துவக் குழுமத் தலைவர் முத்துராமலிங்கம், நிர்வாக இயக்குநர் கார்த்திக், அமைச்சர் மூர்த்தி, வேலம்மாள் கல்விக் குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி வேல்முருகன் உள்ளிட்டோர். (வலது) கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றிய சிவாச்சாரியார்கள்.

மதுரை

மதுரை வேலம்மாள் மருத்துவ மனை வளாகத்தில் உள்ள வேல்முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் வள்ளி, தேவசேனா சமேத வேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

இதில் வேலம்மாள் மருத்துவக் குழுமத் தலைவர் முத்துராமலிங்கம், நிர்வாக இயக்குநர் கார்த்திக், அமைச்சர் மூர்த்தி, வேலம்மாள் கல்விக் குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றன. இதில் திருப்பரங்குன்றம் கோயில் ராஜா பட்டர் தலைமையில் சிவாச்சாரியர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் யாக சாலையில் இருந்து புனித கலசங்களை எடுத்து வந்து கோபுர விமானங்களில் சிவாச்சாரியர்கள் வேத மந்தி ரங்கள் முழங்க அபிஷேகம் செய்தனர்.

மகாலட்சுமி, சரஸ்வதி, தன்வந்திரி, பைரவர், ஆஞ்ச நேயர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்க ளுக்கும் கும்பாபிஷேகம் செய்யப் பட்டது. பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x