Published : 11 Nov 2021 03:08 AM
Last Updated : 11 Nov 2021 03:08 AM
மதுரை மீனாட்சியம்மன் கோயி லுக்குச் சொந்தமான பழமையான புது மண்டபத்தில் வியாபாரிகளை வெளியேற்றும் நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மீனாட்சியம்மன் கோயில் அருகே புதுமண்டபத்தில் உள்ள சிற்பங்கள் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
புதுமண்டபத்தில் 300 கடைகள் வரை செயல்பட்டன. சதுர அடிக்கு ரூ.40 வீதம் கோயில் நிர்வாகம் வாடகை வசூலித்தது.
இந்நிலையில் புதுமண்டபத் தில் பராமரிப்பு மேற்கொள்ள வியாபாரி களை வெளியேற்ற கோயில் நிர் வாகம் முடிவு செய்தது. மேலும் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குன்னத்தூர் சத்திரத்தில் புதுமண்டப வியாபாரிகளுக்காக வணிக வளாகம் கட்டப்பட்டது.
தற்போது குன்னத்தூர் சத்திர வணிக வளாகம் திறக்கப்பட்டு அங்குள்ள கடைகளை மாநகராட்சி நிர்வாகம் புதுமண்டபம் வியா பாரிகளுக்கு கடந்த மாதமே சதுர அடி ரூ. 80-க்கு வாடகைக்கு ஒதுக் கீடு செய்து விட்டது.
ஆனால், இதுவரை புது மண் டபம் வியாபாரிகள் கடைகளைக் காலிசெய்ய முன்வரவில்லை. அதனால் நேற்று புதுமண்டபத்தில் மின் இணைப்பை கோயில் நிர் வாகம் அதிரடியாகத் துண்டித்தது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், கடந்த அக்டோபரிலேயே குன்னத்தூர் சத்திரத்தில் கடைகளை ஒதுக்கி விட்டோம். ஆனால், அங்கு செல்ல வியாபாரிகள் சிறு முயற்சிகூட செய்யவில்லை என்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘நாங்கள் குன்னத்தூர் சத்திரம் செல்ல மறுக்கவில்லை. அதற்கு கால அவகாசம்தான் கோருகிறோம். மின் இணைப்பை துண்டித்தது நியாயமா? என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT