Published : 10 Nov 2021 03:07 AM
Last Updated : 10 Nov 2021 03:07 AM
சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய இம்மாதம் 15-ம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் தீவிரமடையும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிக்கையில் தெரிவித்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் மழைக் காலங்களில் நீர்த்தேங்கி சம்பா பயிருக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது, அவ்வாறு பயிர்ச் சேதம் ஏற்படின் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது,
எனவே சம்பா பயிர் சாகு படி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் தாங்கள் சாகுபடி செய் துள்ள பயிரினை உடனடியாக கடைசி நாள் (நவ 15) வரை காத்திருக்காமல் அருகிலுள்ள பொது சேவை மையம்.
தொடக்க வேளாண் கூட்டுறவுவங்கி மற்றும் அரசுடமை யாக்கப்பட்ட வங்கியில் உரிய படிவத்தினை பூர்த்தி செய்து சிட்டா, அடங்கல். ஆதார் எண் மற்றும் வங்கி பாஸ் புத்தகத்தின் நகல் ஆகியவற்றை கொண்டு சென்று பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வருகிற 15-ம் தேதிக்குள் பதிவு செய்து, இயற்கை இடர்பாடு களின் மூலம் ஏற்படும் பொருளா தார இழப்பிலிருந்து தங்களை காத்துக் கொள்ளுமாறு அச் செய்தி குறிப்பில் கேட்டுக் கொண் டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 1,06,335 ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 8-ம் தேதி வரை 16,474 விவசாயிகள் 38,143 ஏக்கர் மட்டுமே திருத்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
கடந்த 8-ம் தேதி வரை 16,474 விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT