Published : 10 Nov 2021 03:07 AM
Last Updated : 10 Nov 2021 03:07 AM

கரை உடைந்து தண்ணீர் வெளியேறுவது உபரி நீராகுமா? : பாசனம் பாதிக்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் புகார்

கரை உடைந்து தண்ணீர் வெளியேறும் கடத்தூர் ஏரியை பார்வையிடும் ஆட்சியர் பி.என்.தர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பிய நிலையில் கடத்தூர் ஏரிக் கரை உடைந்து தண்ணீர் வெளியேறி, விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளது. அதை உபரி நீர் என்றும், அதன் மூலம் 57 ஹெக்டர் விளைநிலம் பயன்பெறும் என்றும் ஆட்சியர் கூறுவது ஏற்புடையதல்ல என விவசாயிகள் வருத்தம் தெரி விக்கின்றனர்.

வட கிழக்குப் பருவமழை தீவி ரமைடந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் 43 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இதில் தியாகரா ஜபுரம் மற்றும் கடத்தூர் ஏரிகளின் கரை நேற்று முன் தினம் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அருகிலுள்ள விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து, பயிர் பாதிக்கும் சூழல் உள்ளது.

இதையறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர்மற்றும் பொதுப்பணித் துறைஅலுவலர்கள் நேற்று சின்னசேலம்வட்டம் கடத்தூர் மற்றும் தெங்கி யாநத்தம் கிராமத்திற்குட்பட்ட பொதுப்பணித்துறையின்கீழ் உள்ள ஏரிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துஆய்வு செய்தனர்.

அப்போது ஆட்சியர் கூறுகை யில், “கடத்தூர் ஏரி முழு கொள்ளளவை அடைந்து உபரி நீர் வெளி யேறுவதால் 57.89 ஹெக்டேர் விவ சாய நிலம் பாசன வசதி பெற்று பயன்பெறுகிறது. இந்த உபரி நீரால் நல்லாத்தூர் ஏரி, குதிரைச்சந்தல் ஏரி, காரனூர் பெரியஏரி, காரனூர் சிற்றேரி, விலாந்தாங்கல் ஏரி, எலியத்தூர் பெரியஏரி, எலியத்தூர் சிற்றேரி, தொட்டியம் ஏரி மற்றும்பங்கராம் ஏரி ஆகிய ஏரிகளுக்குசென்றடைவதால், அப்பகுதிக்குட் பட்ட விவசாய நிலங்கள் பயன் பெறும்.

அதேபோல் தெங்கியாநத்தம் கிராமத்திலுள்ள பெரிய ஏரி முழு கொள்ளளவை அடைந்து உபரி நீர் வெளியேறி வருவதால் 32.41 ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று பயனடைகிறது.

இந்த உபரி நீர் பைத்தந்துரை ஏரி, தென் செட்டியந்தல் ஏரி, நமச்சிவாயபுரம் ஏரி, சின்னசேலம் பெரியஏரி மற்றும் வெட்டி பெருமாள் நகரம் ஏரி ஆகிய ஏரிகளில் சென்றடைவதால், அப்பகுதிக்குட்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும்.

நீர் நிலைகள் நிரம்பி வருவதால்குளிப்பதற்கோ, பார்வையிடுவ தற்கோ செல்வதை தவிர்க்க வேண்டும். கரையின் இருபுறமும் உள்ள பொதுமக்களுக்கு முன்னெச் சரிக்கை செய்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என் றார்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன் கூறுகையில், “வட கிழக்குப் பருவமழைக்கு முன்னர் மேற்கொள்ள வேண் டிய பணிகளை முறையாக மேற்கொள்ளாததால், ஏரியின் கரைஉடைந்துள்ளது. இதை மூடி மறைக் கும் வகையிலும், பொதுப்பணித் துறையினரின் தவறை மறைக்கும் வகையில் ‘வெளியேறுவது உபரி நீர்’ என்கிறார் ஆட்சியர்.

ஏரியை தூர்வாரி, கரையைப் பலப்படுத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. உடனடி யாக ஆட்சியர் விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஏரியை தூர்வாரி, கரையைப் பலப்படுத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x