Published : 10 Nov 2021 03:07 AM
Last Updated : 10 Nov 2021 03:07 AM
மதுரையில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் கைது செய்யப் பட்டார். அவரது கைதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில், மதுரை முனிச் சாலை சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன், மாநி லத் தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், கரோனா தடுப்பு விதிமுறையை மீறி கூட்டம் கூடியதாக சோலைக் கண்ணன், அர்ஜூன் சம்பத் உட்பட 98 பேர் மீது தெப்பக்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT