Published : 09 Nov 2021 03:09 AM
Last Updated : 09 Nov 2021 03:09 AM
திண்டிவனம் அருகே உள்ள வீடூர் அணைக்கு விநாடிக்கு 2,300 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் முழு கொள்ளளவான 32 அடியில்( 605 மில்லியன் கன அடி) 31.35 அடி (534.5 மில்லியன் கன அடி) நிரம்பியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 5 கதவுகள் வழியாக விநாடிக்கு 2,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 1,286 ஏரிகள் உள்ளன. இவற்றில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 506 ஏரிகளில் 114 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 46 ஏரிகள் 75 சதவீதம், 53 ஏரிகள் 51 சதவீதம், 129 ஏரிகள் 25 சதவீதம் நிரம்பியுள்ளன. ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 780 ஏரிகளில் 68 ஏரிகள் முழுமையாகவும், 149 ஏரிகள் 75 சதவீதமும், 184 ஏரிகள் 51 சதவீதமும், 249 ஏரிகள் 25 சதவீதமும், 117 ஏரிகள் 25 சதவீதத்திற்கு குறைவாகவும்,13 ஏரிகள் தண்ணீரின்றி உள்ளன.
நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், வெள்ளத்தில் யாரேனும் சிக்கினால் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கலாம் என்று மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபீன் கேஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT