குழந்தைகள் பாதுகாப்பு வார விழா கொண்டாட்டம்  :

குழந்தைகள் பாதுகாப்பு வார விழா கொண்டாட்டம் :

Published on

அரியலூர் மாவட்டம் வாரணவாசி சமத்துவபுரத்தில் காவல்துறை சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு வார விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வாரணவாசி ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட கூடுதல் எஸ்.பி.க்கள் விஜயகுமார், திருமேனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், ஷகி ஒருங்கிணைந்த சேவை மைய ஆற்றுபடுத்துநர் சுகன்யா, அரியலூர் குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் ஆகியோர், குழந்தை திருமணம் தவிர்ப்பது, குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்போருக்கு கிடைக்கப்பெறும் தண்டனைகள் உள்ளிட்டவை குறித்து பேசினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in