Published : 08 Nov 2021 01:10 AM
Last Updated : 08 Nov 2021 01:10 AM
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலைத் தேர்தல் நடத்தும் அலுவலர், ஆணையர் கா.ப.கார்த்திகேயன் வெளியிட்டார்.
நவ.,1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலின்படி மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளிலும் 6,51,523 ஆண்கள், 6,73,457 பெண்கள், 129 இதர வாக்காளர்கள் என மொத்தம் 13,25,109 பேர் இடம் பெற்றுள்ளனர். மண்டலம் 1-ல் 1,45,077 ஆண்களும் 1,50,604 பெண்களும் இதர வாக்காளர்கள் 31 பேரும், மண்டலம் 2-ல் 1,60,860 ஆண்களும் 1,68,439, பெண்களும் இதர வாக்காளர்கள் 38 பேரும், மண்டலம் 3-ல் 1,87,914 ஆண்களும் 1,91,085 பெண்களும் இதர வாக்காளர் 38 பேரும் உள்ளனர். மண்டலம் 4-ல் 1,57,672 ஆண்களும் 1,63,329 பெண்களும் இதர வாக்காளர்கள் 22 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
மண்டலம் 1 மற்றும் 2-ல் தலா 319 வாக்குச் சாவடிகள், மண்டலம் 3-ல் 385, மண்டலம் 4-ல் 284 வாக்குச்சாவடிகள் என 1.307 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பட்டியல் குறித்து மறுப்புரை அல்லது கருத்துரை தெரிவிக்க விரும்புவோர் இன்று (நவ. 8) பிற்பகல் 4 மணிக் குள் மாநகராட்சி ஆணையரிடமோ அல்லது நான்கு மண்டல உதவி ஆணையர்களிடமோ எழுத்து மூலம் தெரிவிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT