Regional01
மரம் விழுந்து முதியவர் உயிரிழப்பு :
திருச்சியில் மரம் சாய்ந்து விழுந் ததில் முதியவர் உயிரிழந்தார்.
திருச்சி வரகனேரி பென்சனர் தெருவைச் சேர்ந்தவர் மகாமுனி(70). கூலித் தொழிலா ளியான இவர், நேற்று காலை அப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோயில் அருகே டீ கடை முன் அமர்ந்திருந்தார்.
அப்போது திடீரென அங்கி ருந்த பூவரசம் மரம் சாய்ந்து மகாமுனி மீது விழுந்தது. இதில், அந்த இடத்திலேயே மகாமுனி உயிரிழந்தார்.
இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
