Published : 07 Nov 2021 03:07 AM
Last Updated : 07 Nov 2021 03:07 AM

விவசாய பாசனத்துக்காக வைகை தண்ணீரை சாத்தியார் அணைக்கு கொண்டுவர வேண்டும் : தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் வலியுறுத்தல்

பாலமேடு அருகேயுள்ள சாத்தியார் அணையை இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங் தலைமையிலான நீர் மேலாண்மைக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

மதுரை

வைகை அணை தண்ணீரை சாத்தி யார் அணைக்குக் கொண்டுவரும் திட்டத்தை செயல்படுத்தினால் பல கிராமங்கள் வேளாண் மற்றும் குடிநீர் வசதியைப் பெறும் என இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மழை நீர் சேமிப்புத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் 850 கிராமங்களில் 4,500 தடுப்பணைகளையும் தண் ணீர் சேமிப்புக் குளங்களையும் கட்டியதோடு, காணாமல் போன பல ஆறுகளுக்குப் புத்துயிர் கொடுத்தவர். இந்தியாவின் தண் ணீர் மனிதர் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங். இவர் சாத்தியார் அணையில் நிரந்தரமாக தண்ணீர் தேக்குவது குறித்து நேற்று ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை. 29 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை, மழைக் காலத்தின்போதும் நிரம்பாமல் வறண்டு காணப்படுகிறது. கடந்த ஆண்டு, இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறும் 10 கண்மாய் விவசாயிகள் இணைந்து நீர்வழிப் பாதையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் கடந்தாண்டு சாத்தியாறு அணை மட்டுமின்றி, பாசனவசதி பெறும் 10 கண் மாய்களும் நிரம்பின. தொடர் மழை காரணமாக தற்போது அணையின் நீர்மட்டம் 25 அடிக்கு மேல் உள்ளது.

சாத்தியார் அணையில் நிரந்த ரமாக தண்ணீர் தேக்குவது குறித்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தண்ணீர் மனிதர் என்றழைக்கப்படும் ராஜேந்திரசிங் நேற்று ஆய்வு செய்தார். அப் போது அவர் கூறியதாவது: சாத்தியார் அணையின் மூலம் மானாவாரிப் பயிர் விவசாயம் நன்றாக நடக்கிறது. வைகை அணையிலிருந்து பேரணைக்கு வரும் தண்ணீர் மதுரைக்கு குடிநீருக்காக கொண்டு செல்லப் படுகிறது.

பேரணையில் பம்பிங் ஸ்டே ஷன் அமைத்து, அங்கிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள சாத்தியார் அணைக்கு பெரிய இரும்புக் குழாய்கள் மூலம் தண்ணீரைக் கொண்டுவர வேண்டும். இத்திட் டத்தில் மழைக்காலத்தில் வீணாகும் தண்ணீரை இந்த அணையில் சேமிக்கலாம். இதன் மூலம் சாத்தியார் அணையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழும். இந்த இணைப்பு நடந்தால் அணையில் எப்போதும் தண்ணீர் தேங்கியிருக்கும்.

வைகை அணையுடன் சாத்தியார் அணையை இணைக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வேன். இதற்காக முதல்வரை சந்தித்து முறை யிடுவேன். இவ்வாறு அவர் கூறினார். விவசாயிகள் பலர் அடங்கிய நீர் மேலாண்மை குழுவினர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x