Published : 04 Nov 2021 03:12 AM
Last Updated : 04 Nov 2021 03:12 AM
தொடர் மழை காரணமாக திண்டி வனம் அருகே வீடுர் அணையின் நீர் கொள்ளளவை ஆட்சியர் மோகன் நேற்று ஆய்வு செய்தார். இந்த அணையின் மொத்த உயரம் 32 அடி. இதில் நேற்று காலை வரை 27.800 அடி வரை நீர் நிரம்பி இருந்தது. அணைக்கு விநாடிக்கு 539 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இனிவரும் நாட்களில் மழையின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால், அணையின் நீர் கொள்ளளவினை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.
அவ்வப்போது அணையின் பாதுகாப்பு தன்மையினை உறுதி செய்து கொள்ள வேண்டும்என ஆட்சியர் பொதுப்பணித் துறையினருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் பொதுப் பணித்துறையினர் உடனி ருந்தனர்.
இனிவரும் நாட்களில் மழையின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால், அணையின் நீர் கொள்ளளவினை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT