Published : 04 Nov 2021 03:12 AM
Last Updated : 04 Nov 2021 03:12 AM
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுரையின் பாரம்பரிய அடையாளமும், பாண்டிய நாட்டுச் சின்னமுமான மூன்று மீன்கள் நீரூற்றில் துள்ளி விளையாடுவது போன்ற பித்தளை உலோகத்தால் அமையப்பெற்ற பிரம்மாண்ட சிலையை மதுரை ரயில் நிலை யத்தின் முன்பாக தமிழ் நாடு தொழில் வர்த்தக சங்கம் 1999-ல் நிறுவியது.
இந்நிலையில், ரயில் நிலையத்தின் முன்பகுதியை அழகுபடுத்தி, விரிவாக்கம் செய்யும்போது நகர் பேருந்துகள் உள்ளே செல்வதற்கு வசதியாக அச்சிலையை அகற்றினர். அதற்கு பதிலாக வேறு ஒரு பொருத்தமான இடத்தில் ரயில் நிலையத்தின் முன்பகுதியில் சிலையை மீண்டும் அமைக்க, அப்போதைய கோட்ட மேலாளர் உறுதியளித்தார்.
அதன்பேரில், மீன்சிலை அகற்றப்பட்டு ரயில் நிலையத்திலுள்ள அறை ஒன்றில் வைக்கப்பட்டது. தற்போதைய கோட்ட மேலாளர் அனந்த் பத்பநாபன் ரயில் நிலையத்தின் முன்புறம் மீன் சிலையை அமைக்க இடத்தை தேர்வு செய்து கொடுத்துள்ளார். அவ்விடத்தில் மீன் சிலையை அமைப்பதற்கான பூமி பூஜை எனது தலைமையில் நாளை மறுநாள் (நவ. 6) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
மதுரை எம்பி சு.வெங்கடேசன், ரயில்வே கோட்ட மேலாளர், வர்த்தக மேலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT