Published : 04 Nov 2021 03:12 AM
Last Updated : 04 Nov 2021 03:12 AM
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி, 9 மாதம் கர்ப்பிணியான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி சமூகநல அலுவலர் கருப்பாயி விசாரித்தார்.
இதில் தாதன்குளத்தை சேர்ந்த பிரகாஷ்(21), சிறுமியிடம் பழகி பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்துள்ளார்.
இதில் அவர் 9 மாத கர்ப்பிணியான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரிந்தது.
இதுகுறித்து கருப்பாயி டி.கல்லுப்பட்டி காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், பிரகாஷ், அவரது தந்தை ராமசாமி, தாய் குருதை, உறவினர் சுருளிவேல், அவரது மனைவி முத்து ஆகிய 5 பேர் மீது ‘போக்ஸோ’ சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT