Published : 03 Nov 2021 03:09 AM
Last Updated : 03 Nov 2021 03:09 AM

கொட்டும் மழையையும் பொருட்படுத்தவில்லை - மதுரையில் இறுதிக்கட்ட தீபாவளி விற்பனை அமோகம் : புத்தாடை, வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க குவிந்த மக்கள்

மதுரை தெற்கு மாசி வீதியில் கொட்டும் மழையிலும் தீபாவளி பொருட்களை வாங்க குவிந்த மக்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

மதுரையில் கொட்டும் மழை யையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் புத் தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை நாளை (நவ.4) விமரி சையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மது ரையில் விளக்குத்தூணை சுற்றி யுள்ள தெற்குமாசி வீதி, பத்துத் தூண் சந்து, ஜடாமுனி கோயில் தெரு, சித்திரை வீதிகள் மற்றும் திண்டுக்கல் ரோடு, டவுன்ஹால் ரோடு உட்பட பல்வேறு இடங்களில் ஜவுளி கடைகள் உள்ளன. இது மட்டுமின்றி இப்பகுதிகளில் ஏரா ளமான நடைபாதை கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கடைகளில் மதுரை மட்டு மின்றி திண்டுக்கல், தேனி, சிவ கங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங் களில் இருந்தும் புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பட்டாசுகள் வாங்க ஏராளமான பொதுமக்கள் திரண் டனர். இக்கடைகளில் கடந்த சில நாட்களாகவே தீபாவளி வியா பாரம் விறுவிறுப்பாக இருந்தது.

மதுரையில் சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ளதால் பொதுமக்கள் குடை பிடித்தவாறு புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிச் சென்றனர். மாசி வீதிகளில் நடந்து செல் லக்கூட முடியாத அளவு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அத னால், நடைபாதைகள் முதல் பெரிய, பெரிய கடைகளில் இறு திக்கட்ட தீபாவளி வியாபாரம் அமோகமாக நடக்கிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் சாலைத் தெரு, எஸ்.எம். அக்ரஹாரம், அரண்மனைப் பகுதிகள், வண்டிக்காரத் தெரு, மீன் மார்க்கெட் தெரு, மத்திய மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் புத்தாடைகள், பட்டாசுகள், குடைகள், துணி வகைகள், கவரிங் நகைகள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவற்றை சாலையோரக் கடைகளில் மழையையும் பொருட்படுத்தாது, ஏராளமான பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x