கிராம உதவியாளர் சங்க கூட்டம் :

கிராம உதவியாளர் சங்க கூட்டம் :

Published on

தென்காசி மாவட்டம், மேலகரத்தில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, தென்காசி வட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். நிர்வாகி கள் தங்கமணி, கருணாலய பாண்டியன், சொரிமுத்து, சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கோட்டத் தலைவர் அருணாசலம் வரவேற்றார்.

மாநிலத் தலைவர் முத்தையா, திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் முருகன், திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் நாராயணன், மாநில செயலாளர் பிச்சுக்குட்டி, மாநில கவுரவத் தலைவர் சண்முகசுந்தர பாண்டியன் ஆகியோர் பேசினர். கூட் டத்தில், ‘தென்காசி மாவட்ட த்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2003-ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு சிபிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில இணைச் செயலாள ராக சுப்பிரமணியன், தென்காசி மாவட்டத் தலைவராக அருணா சலம், தென்காசி கோட்ட தலைவராக கிருஷ்ணசாமி தேர்வு செய்யப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in