Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM
வடகிழக்கு பருவமழை பேரிடர் மேலாண்மை மற்றும் விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் குறித்து திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறை சார்பில் சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சிவனேசன் தலைமை யிலான குழுவைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர்கள் வரதராஜ், செந்தில்குமார், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் சோமு மற்றும் தீயணைப்புத் துறையினர் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
அப்போது அவர்கள், “மழை காலங்களில் நீர்நிலைகள் அருகே செல்லக்கூடாது, குளிக்கக் கூடாது மற்றும் நீதிமன்றம் அனுமதித்துள்ள நேரத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்” என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT