Published : 31 Oct 2021 03:11 AM
Last Updated : 31 Oct 2021 03:11 AM
‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தைக் கவனமுடன் செயல்படுத்துவோம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழகாக வடிவமைத்து கொடுத்த திட்டம்தான் ‘இல்லம் தேடி கல்வி’. மரக்காணத்தில் இந்தத் திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தி பேசும்போது, இந்தக் கல்வித் திட்டம் ‘திராவிட திட்டம்’ என்றுதான் பேசினார். எனவே, முதல்வர் அறிவுறுத்தியபடி, நாங்கள் இந்தத் திட்டத்தைக் கவனத்துடன் செயல்படுத்துவோம்.
திமுகவினர் மீது கூறப்படும் புகார்கள் மீது விசாரணை நடத்தி உண்மையாக இருந்தால் கட்டாயம் முதல்வர் நடவடிக்கை எடுப்பார். ஏனெனில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதை வழக்கமாக முதல்வர் கொண்டுள்ளார் என்றார்.
நவ.1-ம் தேதி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கரோனா 3-வது அலை குறித்த அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறதே என்ற கேள்விக்கு, ‘‘ஊரடங்கில் எந்தவொரு தளர்வாக இருந்தாலும் மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறையிடம் ஆலோசனை கேட்டுத்தான் நாங்கள் செய்து வருகிறோம்.
பள்ளிகள் இயக்கத்திலும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் ஆலோசனையின்படி நடவடிக்கை இருக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT