Published : 30 Oct 2021 03:14 AM
Last Updated : 30 Oct 2021 03:14 AM
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்114-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையில் பங்கேற்க சசிகலா நேற்று முன்தினம் மதுரை வந்தார். தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவர் நேற்று காலை பசும்பொன் புறப்பட்டுச் செல்வதற்கு முன் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரை அழகர்கோவில் சாலை முதல் கோரிப்பாளையம் வரை அமமுகவினர், பெண்கள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு கைகளில் அதிமுக, அமமுக கொடியேந்தி வரவேற்பு அளித்தனர். அப்போது தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சி பொதுச்செயலாளர் டாக்டர் கணேசன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி நிறுவனத் தலைவர் வி.எம்.முஸ்தபா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மருது சகோதரர்களின் 220-வது குருபூஜையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைகளுக்கு சசிகலா மாலை அணிவித்தார். பின்னர் தீபாராதனை காண்பித்தும், பூக்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். முன்னதாக தெப்பக்குளம் பகுதியில் பெண்கள் ஏராளமானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT