Published : 30 Oct 2021 03:14 AM
Last Updated : 30 Oct 2021 03:14 AM

மதுரையில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் :

மதுரையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.

மதுரை:

திரிபுரா மாநிலம் அகர்தலா, பனிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த வன்முறையில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டுள்ளன. இச்சம்பவங்களை கண்டித்தும், முஸ்லிம்களை பாதுகாக்க வலியுறுத்தியும் மதுரை புதூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வடக்கு மாவட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்டத் தலைவர் பிலால் தீன் தலைமையில் அக்கட்சியினர் பங்கேற்றனர்.

இதேபோல், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் சையது இஸ்ஹாக் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் முகமது அபுதாகீர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், தமிழ் புலிகள் மாநில அமைப்புச் செயலாளர் முகிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x