Published : 30 Oct 2021 03:14 AM
Last Updated : 30 Oct 2021 03:14 AM
பெரியாறு அணை தொடர்பான வதந்திகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக அரசின் சட்டப் போராட்டத்தால் உச்ச நீதிமன்றம் 142 அடியாக நீரை தேக்கிக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது . தற்போது வரை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் கேரள அரசு இப்பகுதியில் அணை கட்டுவோம் என்றும், அணை நீர்மட்டத்தை 136 அடிக்குமேல் உயர்த்தக்கூடாது என்றும், உபரி நீரால் இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தவறான கருத்துக்கள், வதந்திகளை திட்டமிட்டு பரப்புகின்றன.
மேலும் கேரள நடிகர்கள் பெரியாறு அணையை நீக்குவோம் என்று டுவிட்டரில் பதிவிடுவதோடு 125 ஆண்டுகள் ஆன பழமையான அணை என்று பல வதந்திகள் கூறி உண்மைக்குப் புறம்பாக நியாயம் கற்பித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது. பெரியாறு அணை விவகாரத்தில் கேரள நடிகர்கள், அரசியல்வாதிகள் தொடர்ந்து விஷமப் பிரச்சாரம் செய்து வருவார்களானால் இரு மாநில உறவுகள் கேள்விக்குறியாகும். எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தில் முதல்வர் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT