Published : 30 Oct 2021 03:15 AM
Last Updated : 30 Oct 2021 03:15 AM
திருச்சி, தஞ்சாவூர், நாகை, கரூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதில், ரூ.1.93 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், அரசு அலு வலகங்களில் பொதுமக்களிடமி ருந்து அதிகளவில் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
இதன்படி திருச்சி பிராட்டியூ ரிலுள்ள மேற்கு வட்டாரப் போக்கு வரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு திருச்சி டிஎஸ்பி மணிகண்டன் தலை மையிலான போலீஸார் நேற்று மாலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 4 இடைத் தரகர்களிடமிருந்து ரூ.60 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இரவு வரை சோதனை நீடித்தது.
இதேபோல, தஞ்சாவூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவல கத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ராஜூ தலைமையிலான போலீஸார் நேற்று மதியம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அலுவலகத்தின் உள்ளே 3 இடங்களில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த மற்றும் 2 புரோக்கர்களிடம் இருந்த ரூ.30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து 2 புரோக்கர்களிடமும், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தொடர்ந்து விசாரித்தனர்.
நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மாலை டிஎஸ்பி சித்திரவேல் தலைமையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.51,700 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அலுவலக உதவியாளர் மூர்த்தியின் வங்கிக் கணக்கிலிருந்து வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடகிருஷ்ணனின் வங்கிக் கணக்குக்கு ரூ.30 ஆயிரம் பணம் அனுப்பியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில், டிஎஸ்பி நடராஜன் தலைமையிலான ஊழல் தடுப்பு கண்காணிப்புப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.
இதில் ரேஷன்கார்டுக்கு விண்ணப்பித்தவர்களிடம் கடந்த மாதம் தலா ஒரு அட்டைக்கு ரூ.20 வீதம் 146 கார்டுகளுக்கு நடைமுறை கட்டணமாக ரூ.2,920 தொகை பெற்றதற்கான ரசீது உள்ள நிலையில், அதில் ரூ.190 மட்டுமே கையிருப்பில் இருந்தது. மீதமுள்ள தொகை ரூ.2,730 என்ன ஆனது என்பது குறித்த விவரம் இல்லை. இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் ரவிவர்மன், வருவாய் அலுவலர்கள் சரவணன், நவீன்குமார் ஆகியோரிடம் 4 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நந்தகோபால் தலைமையிலான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீ ஸார் நேற்று மாலை சோதனை நடத்தினர். அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றி யழகன், மணிமாறன் மற்றும் அலு வலர்களிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு 9 மணிக்குப் பிறகும் நீடித்தது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று மாலை சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.51,500 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT