Published : 30 Oct 2021 03:15 AM
Last Updated : 30 Oct 2021 03:15 AM
திருச்சி மாவட்டத்தில் மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் உள்ள மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் நவம்பர் மாதத்துக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதன்படி நவ.2-ம் தேதி துறையூர், நவ.5-ம் தேதி முசிறி, நவ.9-ம் தேதி லால்குடி, நவ.12-ம் தேதி ரங்கம், நவ.16-ம் தேதி திருச்சி நகரியம், நவ.19-ம் தேதி திருச்சி கிழக்கு, நவ.23-ம் தேதி மணப்பாறை ஆகிய கோட்டங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங் கள் நடைபெறவுள்ளன. இந்நாட் களில் அந்தந்த கோட்டத்துக் குட்பட்ட மின் நுகர்வோர் தங்க ளது குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT