Published : 30 Oct 2021 03:15 AM
Last Updated : 30 Oct 2021 03:15 AM
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் வாழும்சிறுபான்மையின மக்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கெனவே செய்துகொண்டிருக்கும் தொழிலை விரிவுபடுத்தவும், தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாகவும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சிறுவணிகக் கடன், கல்விக் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்குமட்டுமே கடனுதவி வழங்கப்படும். கடன் உதவி திட்டங்கள் மாவட்டமத்திய கூட்டுறவு வங்கி, நகரகூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன. வங்கி விதிகளின்படி கடன் தொகைக்கான பிணையம் தேவைப்படின் அளிக்கப்பட வேண்டும்.
வரும் 1-ம் தேதி காலை 10.30 மணிக்கு சேரன்மகாதேவி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 2-ம் தேதி காலை 10.30 மணியளவில் நாங்குநேரியில் வட்டாட்சியர் அலுவலகத்திலும் கடன் கோரும்விண்ணப்பங்களை பெறுவதற்கான முகாம் நடைபெறுகிறது. கடன் தேவைப்படும் சிறுபான்மையினத்தவர் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT