Published : 29 Oct 2021 03:10 AM
Last Updated : 29 Oct 2021 03:10 AM
ராயக்கோட்டை அருகே புதையல் இருப்பதாகக் கூறி கிராம மக்களை ஏமாற்றிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் புதையல் இருப்பதாகக் கூறி கிராம மக்களை ஏமாற்றும் கும்பல் சுற்றித் திரிவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து எஸ்ஐ சிவராஜ் தலைமையிலான போலீஸார், ராயக்கோட்டை அடுத்துள்ள தின்னூர் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 8 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள், ராயக்கோட்டை ரத்தினகிரி பகுதி பெருமாள் (22), கருவாட்டனூர் கோவிந்தராஜ் (42), பாஞ்சாலியூர் சரவணன் (38), முகலூர் அப்பாதுரை (29), பிரசாந்த் (26), முனியப்பன் (19), சக்திவேல் (29), தின்னூர் ராதாகிருஷ்ணன் (50) என தெரிய வந்தது. மேலும், ராயக்கோட்டை பகுதியில் உள்ள கோயில், தனியார் நிலங்களில் புதையல் இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்களிடம் பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் 8 பேரையும் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT