Published : 29 Oct 2021 03:11 AM
Last Updated : 29 Oct 2021 03:11 AM

தேவர் ஜெயந்தியையொட்டி - மதுரையில் பாதுகாப்பு பணியில் 4,500 போலீஸார் : கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு

மதுரை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜையையொட்டி மதுரை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன.

இப்பணியில் 3 கூடுதல் எஸ்பிக்கள், 22 டிஎஸ்பிக்கள், 50 ஆய்வாளர்கள், 248 எஸ்ஐ-க்கள், 1,052 காவலர்கள், 269 ஆயுதப்படை போலீஸார், 370 பட்டாலியன் போலீஸார், ஊர்க் காவல் படையினர் என சுமார் 2,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மதுரை மாநகரில் கோரிப்பாளையம், தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா தலைமையில் 4 துணை ஆணையர்கள், 14 உதவி ஆணையர்கள், 40 காவல் ஆய்வாளர்கள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர் கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

மதுரை, சிவகங்கை, ராமநா தபுரம் மாவட்டங்களில் பாதுகாப்பு பணிகள் குறித்து கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு செய் தார்.

வாகன வழித்தடங்கள்

பசும்பொன் செல்வோர் வாட கை வாகனத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங் களின் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டு பயணித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸார் எச்சரித்துள்ளனர். வாகனத்தில் செல்வோர் ராமநாதபுரம் ஆட்சி யரிடம் முன்அனுமதி சீட்டு பெற்று, கண்ணாடி முன்பு ஒட்ட வேண்டும்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங் களில் இருந்து வாகனங்களில் செல்வோர் மதுரை மாநகர் வழியாக வந்து ராமநாதபுரம் சுற்றுச்சாலை வழியாக பசும்பொன் செல்ல வேண் டும்.

திருச்சியில் இருந்து செல்வோர் மேலூர், ஒத்தக்கடை, ராமநாதபுரம் ரோடு நான்கு வழிச் சாலை அல்லது மேலூர்-சிவகங்கை ரோடு வழியாக பசும்பொன் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, ரெட்டியார்பட்டி வழியாகச் செல்ல வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து செல்லும் நபர்கள் சாயல்குடி, கோவிலாங்குளம் அல்லது அருப் புக்கோட்டை, ரெட்டியார்பட்டி வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, ரெட்டியார்பட்டி அல்லது தூத்துக்குடி, சூரங்குடி, சாயல்குடி வழியாக செல்ல வேண்டும்.

தடை செய்யப்பட்ட வழித்த டங்கள்

மதுரையில் இருந்து புறப்ப டும் மற்றும் மதுரை வழியாகச் செல்லும் வாகனங்கள் வரிச்சியூர், பூவந்தி, பழைய சிலைமான் ரோடு, நெடுங்குளம் வழியாக செல்லவும், மேலூர், திருவாதவூர் வழியாகச் செல்லவும் தடை விதிக்கப்பட் டுள்ளது என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x