Published : 29 Oct 2021 03:11 AM
Last Updated : 29 Oct 2021 03:11 AM
மதுரை பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவி களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தொடர்பாக மகளிர் போலீஸார் பதிவு செய்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் ஜெயச்சந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையை முடித்து 3 மாதத்துக்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மாணவி ஒருவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் எந்த தவறிலும் ஈடுபடவில்லை. சம்பந்தப்பட்டவர்களே புகார் அளிக்காத போது, தொடர்பில்லாத ஒரு நபரால் எப்படி வழக்கு தொடர முடியும்? எனவே, அவரது வழக்கை முடித்து வைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி இளங்கோவன் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் அன்புநிதி வாதிடுகையில், புகாரின் அடிப்படையில்தான் வழக்குப் பதியப்பட்டது. மனுதாரர் ஆட்சேபத்தை விசாரணை அதிகாரியிடம்தான் தெரி விக்க வேண்டும் என்றார். அரசு தரப்பு வாதத் தை ஏற்ற நீதிபதி, மாணவியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT