Published : 28 Oct 2021 03:08 AM
Last Updated : 28 Oct 2021 03:08 AM
மதுரை திருநகர், சுப்ரமணியபுரம், எஸ்எஸ்.காலனி பகுதிகளில் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து கொள்ளை அடிப்பவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டார்.
இதன்படி காவல் துணை ஆணை யர்கள் தங்கதுரை, ராசசேகரன் மேற்பார்வையில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தேனி மாவட்டம், அல்லிநகரத்தைச் சேர்ந்த சோனி ராஜா, அவரது கூட்டாளி வாடிப்பட்டி பெரியராமு, தென்பரங்குன்றம் சுலைமான், செக்கானூரணி கின்னி மங்கலம் அழகர்சாமி, பொம்மி நாயக்கன்பட்டி ராஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து பைக், டிவி, ரூ.23.80 லட்சம் மதிப்பு நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தனிப்படையினரை காவல் ஆணையர் பாராட்டினார். அவர் கூறுகையில், சிசிடிவி கேமராக் கள் குற்றவாளிகளை பிடிக்க உதவி யதாகத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT