Published : 28 Oct 2021 03:09 AM
Last Updated : 28 Oct 2021 03:09 AM
திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்பட்டன. இதில், ரொக்கமாக ரூ.95,79,559 வரப் பெற்றிருந்தது.
மேலும், 271 கிராம் தங்கம், 1,233 கிராம் வெள்ளி மற்றும் ஏராளமான வெளிநாட்டு கரன்சிகளும் வரப் பெற்றிருந்தன.
ரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில், உதவி ஆணையர் கு.கந்தசாமி, புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையர் நா.சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையில் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT